Page Nav

HIDE

Breaking News:

latest

தமிழரசுக் கட்சிக்கு நிபந்தனை விதிக்கும் மன்னார் சட்டத்தரணி டினேசனின் ஆதரவாளர்கள்

நடைபெற இருக்கும் பாராளுமன்ற பொதுத் தேர்தலில்  இளமையான புதிய அரசியல் தலைமை  என்று மன்னார் சட்டத்தரணி செல்வராஜா டினேசன் அவர்களை  ஒரு  வேட்பாளர...

நடைபெற இருக்கும் பாராளுமன்ற பொதுத் தேர்தலில்  இளமையான புதிய அரசியல் தலைமை  என்று மன்னார் சட்டத்தரணி செல்வராஜா டினேசன் அவர்களை  ஒரு  வேட்பாளராக இலங்கை தமிழரசுக் கட்சி நிறுத்தியுள்ளது

சட்டத்தரணி செல்வராஜா டினேசன் அவர்கள்  இளமையான ஒரு ஆளுமை மிக்க சட்டத்தரணி என்பதாலும் அரசியல் ரீதியாக எந்த ஒரு ஊழல் குற்றச்சாட்டுக்கNsh அல்லது மக்களின் வெறுப்புகளை சம்பாதிக்காதவர் என்ற ரீதியில்   இன மத பேதமின்றி அனைத்து மக்களும் இளைஞர் பட்டாளமும்  ஆதரவு வழங்கி வெற்றிபெறச் செய்ய முடிவு செய்துள்ளார்கள்

ஆனால் தற்போது தமிழரசுக்கட்சியில் நிறுத்தப்பட்டுள்ள இதர வேட்பாளர்கள் சிலர் பல வழிகளிலும் மக்கள் மற்றும் இளைஞர்களின் வெறுப்பையும் அதிருப்தியையும் சம்பாதித்துள்ளார்கள் இவ்வாறானவர்கள் தமிழரசுக் கட்சியில் வேட்பாளர்களாக நிறுத்தியிருப்பது  பெருவாரியான இளைஞர்கள் பொது மக்கள் அரசியல் ஆர்வலர்களுக்கும் திருப்தியில்லை என்கிறார்கள்

என்றாலும் இளமையான அரசியல் தலைமை உருவாக வேண்டும் என்னும் நல்ல எண்ணத்தில் மக்களாகிய நாங்கள் சட்டத்தரணி செல்வராஜா டினேசன் அவர்களுக்கு  வழங்கப்படும் வாக்குகள் விருப்பு வாக்குகள் அடிப்படையில்  வெற்றியாளர்கள் தெரிவு செய்யப்படுவார்களா அல்லது  கட்சி முடிவின்படி  பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவார்களா என்று தமிழரசு கட்சியின் தலைமை நிர்வாகிகள் மன்னார் மக்களாகிய எங்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள்

ஏனெனில் பழைய அரசியல்  தலைமைகள் அகற்றி புதிய இளைஞர்களை அரசியல் தளத்தினுள் கொண்டு வந்து தமிழர் அரசிழயலை உறுதியான தளமாக அமைக்க வேண்டும் என்பது  எமது கடமை என்று தற்கேபாது செல்வராஜா டினேசன் அவர்களுக்கு பக்க பலமாக நிற்கும் பெருவாரியான மக்களும் இளைஞர்களும் கேட்டுக் கொண்டார்கள்

எனவே  இந்த விடயத்தில் தமிழரசுக் கட்சியின் தலைமை ஒளிவு மறைவின்றி நேர்மையான பதில் தர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்கள் 


No comments

hill