Page Nav

HIDE

Breaking News:

latest

மன்னார் நீதிமன்றின் வழக்கு விசாரணை தொடர்பாக முகநூலில் பதிவிட்டவருக்கு விளக்க மறியல்

மன்னார் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த வழக்கு விசாரணை தொடர்பாகவும்,நீதிமன்றத்தின் சுயாதீன விசாரணை யை விமர்சித்து   முகநூலில் பதிவிட்ட மன்ன...

மன்னார் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த வழக்கு விசாரணை தொடர்பாகவும்,நீதிமன்றத்தின் சுயாதீன விசாரணை யை விமர்சித்து   முகநூலில் பதிவிட்ட மன்னார் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதவான் இன்று செவ்வாய்க்கிழமை(1) உத்தரவிட்டுள்ளார்.

சட்டத்தரணி பா.டெனிஸ்வரன் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

-மன்னார் சட்டத்தரணிகள் சார்பாக குறித்த இளைஞருக்கு எதிராக மன்னார் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மன்னார் பகுதியைச் சேர்ந்த குறித்த இளைஞர் வைத்தியர் அர்ஜீனா உள்ளடங்களாக நிலுவையில் உள்ள வழக்கு விசாரணைகள் குறித்தும், மன்னார் நீதிமன்றம்,சட்டத்தரணிகள் மற்றும் பொலிஸாருக்கு எதிராகவும் அவ நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையிலும் முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தமை குறித்து மன்னார் சட்டத்தரணிகள் ஊடாக மன்னார் நீதிமன்றத்தில்  குறித்த இளைஞருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த நிலையில் குறித்த இளைஞர்    கடந்த மாதம் மன்றில் முன்னிலை ஆகாத   நிலையில் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை(1) மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.

இதன் போது குறித்த இளைஞர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில் குறித்த நபரை எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டார்.

குறித்த இளைஞர் வைத்தியர் அர்ஜுனா உள்ளடங்களாக சில வழக்கு விசாரணைகள் குறித்து நீதி மன்றம்,சட்டத்தரணிகள்,மற்றும் பொலிஸாரை விமர்சித்து முகநூலில் பதிவிட்ட நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சட்டத்தரணி பா.டெனிஸ்வரன் தெரிவித்தார்.


No comments

hill