Page Nav

HIDE

Breaking News:

latest

மக்கள் இம்முறை இளையோருக்கு ஒரு முறை தமது சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும்-வேட்பாளர் ஏ.றொஜன்

மக்கள் தற்போது மாற்றம் ஒன்றை எதிர்பார்த்துள்ளனர்.இளைஞர்களு ம் எனக்கு பூரண ஆதரவை வழங்கி வருகின்றனர்.எனவே மக்கள் இம்முறை எனக்கும் ஒரு சந்தர்ப்...

மக்கள் தற்போது மாற்றம் ஒன்றை எதிர்பார்த்துள்ளனர்.இளைஞர்களும் எனக்கு பூரண ஆதரவை வழங்கி வருகின்றனர்.எனவே மக்கள் இம்முறை எனக்கும் ஒரு சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும் என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் மன்னார் மாவட்ட வேட்பாளர் ஏ. றொஜன் தெரிவித்தார்.

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் மன்னார் மாவட்ட வேட்பாளர் ஏ.றொஜன்  மாவட்டத்தின் பல பாகங்களிலும் நேற்றைய தினம் (23)  தனது தேர்தல் பிரச்சாரங்களை முன்னெடுத்தார்.

கிராம மக்கள், இளைஞர் கழகங்கள் ,மாதர் சங்கம், பொது அமைப்புக்களை சந்தித்து தனது தேர்தல் பரப்புரையை முன்னெடுத்தார்.

இதன் போது மக்கள் மத்தியில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,,

மக்கள் தற்போது மாற்றம் ஒன்றை எதிர்பார்த்துள்ளனர்.இளைஞர்களும் எனக்கு பூரண ஆதரவை வழங்கி வருகின்றனர்.எனவே மக்கம் இம்முறை எனக்கும் ஒரு சந்தர்ப்பத்தை வழங்கி என்னையும் பாராளுமன்றம் அனுப்பி வையுங்கள்.

மக்களின் பிரச்சினைகளை தற்போது வரை நான் நேரில் சென்று பார்வையிட்டு பல்வேறு உதவிகளை வழங்கி வந்துள்ளேன்.

எனவே மக்களின் பூரண ஒத்துழைப்பு இம்முறை எனக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.மக்கள் இம்முறை புதியவர்களுக்கும்,இளையோருக்கும்  ஒருமுறை தமது சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும் என நேற்றைய தினம் (23) இடம் பெற்ற மக்கள் சந்திப்பின் போது அவர் மேலும் தெரிவித்தார்.

((கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்)))









No comments

hill