வன்னியில் சுயேட்சைக்குழு 7, கோடாரி சின்னத்தில் போட்டியிடும் எமில்காந்தன் தலைமையிலான அணியினரின் முதன்மை வேட்பாளரான எமில்காந்தனின் தேர்தல் பிர...
வன்னியில் சுயேட்சைக்குழு 7, கோடாரி சின்னத்தில் போட்டியிடும் எமில்காந்தன் தலைமையிலான அணியினரின் முதன்மை வேட்பாளரான எமில்காந்தனின் தேர்தல் பிரசார அலுவலகம் வவுனியாவில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வு நேற்று (24.10.24) மாலை இடம்பெற்றுள்ளது.
வவுனியா - பூவரசங்கும் பகுதியில் அமையப்பெற்ற முதன்மை வேட்பாளரின் அலுவலகத்தினை வேட்பாளர் எமில்காந்தன் திறந்துவைத்துள்ளார்.
இந்த நிகழ்வில், வேட்பாளர்களான மரியாம்பிள்ளை சாந்தகுணசிங்கம், தேவராசா சிவராசா, பொ.சிந்தாத்துரை, பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டுள்ளார்கள்.
No comments