Page Nav

HIDE

Breaking News:

latest

மடு பிரதேச செயலகத்திற்கு முன்பாக போராட்டம்.

மழுவராயன் கட்டையடம்பன் பகுதியில் உள்ள தங்கள் பூர்வீக காணியை வனவள திணைக்களம் கையகப்படுத்தி வைத்திருப்பதாக மக்கள் குற்றம் சாட்டி  இன்றைய தினம்...

மழுவராயன் கட்டையடம்பன் பகுதியில் உள்ள தங்கள் பூர்வீக காணியை வனவள திணைக்களம் கையகப்படுத்தி வைத்திருப்பதாக மக்கள் குற்றம் சாட்டி  இன்றைய தினம் திங்கட்கிழமை (14) காலை  போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.


பூர்விகமாக  அந்த பகுதியில் தோட்டம் செய்து வந்த காணியில் கடந்த 1997-ம் ஆண்டு யுத்தம் காரணமாக இடம் பெயர்ந்த நிலையில் 2004- ஆம் ஆண்டு மீள்குடியேறிய நிலையில், 2012 -ம் ஆண்டு மீண்டும் அங்கு கச்சான், பயறு போன்ற சிறுதானிய பயிர் செய்கையில் ஈடுபட்டு வந்த நிலையில், கடந்த 2015- ம் ஆண்டு       திணைக்களத்தினர் தங்களுக்கு சொந்தமான இடம் என கூறி அங்கு சிறுதானிய பயிர் செய்கையில் ஈடுபட்ட இருவரை கைது செய்து நீதிமன்றில் முன்னிலை படுத்தியிருந்தனர்.


அந்த சந்தர்ப்பத்தில் குறித்த பகுதியை வன வள திணைக்களத்தினர் கல் போட்டு தங்களின் பிரதேசமாக மாற்றிக்கொண்டனர்.

 அந்த சந்தர்ப்பத்தில் மக்கள் எப்படி தமது பூர்விக கனிகளை நீங்கள் கையகப்படுத்துவீர்கள் என கேட்ட போது, நீதிமன்ற தீர்ப்பு வரட்டும் அதற்கு பிறகு குறித்த பகுதியை விடுவிப்பதாக தெரிவித்திருந்தனர்.

அதனடிப்படையில் குறித்த பகுதி மக்களுக்கு உரியது என்றும் வன வள திணைக்களத்தினர் விடுவிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தீர்பளித்ததன் பின்னரும் வன வள திணைக்களத்தினர் விடுவிக்கவில்லை .

இதனால் தமது வாழ்வாதாரம் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.


இந்த நிலையில் பாதிக்கப்பட்ட குறித்த கிராம மக்கள் இன்று திங்கட்கிழமை காலை 11 மணியளவில் மடு பிரதேச்ச செயலகத்திற்கு முன் ஒன்று கூடி போராட்டம் இன்றை முன்னெடுத்தனர்.

உடனடியாக எங்களுக்கு சொந்தமான காணியை வன வள திணைக்களத்தினர்  விடுவிக்க வேண்டும் எனவும், அது தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியும் பல்வேறு பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் போது மடு பிரதேச செயலாளரிடம் அக்கிராம மக்கள் தமது கோரிக்கையை முன் வைத்ததோடு,நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அமுல் படுத்தி குறித்த காணியை வனவள திணைக்கள அதிகாரிகளிடம் இருந்து மீட்டு உடனடியாக தங்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்குமாறு அந்த மக்கள் மடு பிரதேச செயலாளரிடம் கோரிக்கை முன் வைத்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

hill