Page Nav

HIDE

Breaking News:

latest

நாங்கள் எவ்வித சலுகைகளுக்கும் சோரம் போகவில்லை-தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மன்னார் வேட்பாளர் சோமநாதன் பிரசாத்

 நாட்டில் இடம்பெற்ற யுத்தம் 2009 ஆம் ஆண்டு முடிவுக்கு கொண்டு வரப்பட்ட பின்னர் தொடர்ந்து  மக்களுக்கான உரிமை தொடர்பாக குரல் கொடுத்து வரும் இயக...

 நாட்டில் இடம்பெற்ற யுத்தம் 2009 ஆம் ஆண்டு முடிவுக்கு கொண்டு வரப்பட்ட பின்னர் தொடர்ந்து  மக்களுக்கான உரிமை தொடர்பாக குரல் கொடுத்து வரும் இயக்கமாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி இயல் பட்டு வருவதாக குறித்த கட்சியின் மன்னார் மாவட்ட வேட்பாளர் சோமநாதன் பிரசாத் தெரிவித்தார்.


தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மன்னார் கிளை ஏற்பாடு செய்த ஊடக சந்திப்பு இன்று செவ்வாய்க்கிழமை(22) மன்னாரில் இடம் பெற்றது.

இதன் போது கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,,,


யுத்தம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் கடந்த 15 வருடங்களாக எமது கட்சி எவ்வித ஊழல் மோசடிகளும் இன்றி கொள்கை மாறாத,கட்சி,சின்னம்,தலைமை போன்றவை மாறாமல் பயணித்துக் கொண்டிருக்கிறோம்.

நாங்கள் எவ்வித விட்டுக் கொடுப்புக்கள் மற்றும் சலுகைகளுக்காக சோரம் போகவில்லை.அது ஒன்றே எமது நேர்மைக்கான சாட்சியாக அமைந்துள்ளது.எமது தலைமை உறுதியான தலைமையாக உள்ளது.

இம்முறை இடம்பெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் எமது கட்சி சார்பாக வன்னி தேர்தல் தொகுதியில் மன்னாரில் இருந்து நான் போட்டியிடுகின்றேன்.

எமது மக்கள் எனக்கு பூரண ஆதரவை வழங்க வேண்டும்.தொடர்ந்து எமது கட்சி கொள்கையிலும்,உரிமையிலும் விட்டுக்கொடுப்பு இன்றி செயல்பட்டு வருகிறது.

.மக்களின் ஆணையை இன்று நாங்கள் கேட்டு நிற்கின்றோம்.

எனவே எனக்கும் உங்கள் வாக்கினை செலுத்தி என்னை வெற்றி பெறச் செய்யுங்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

(((கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்)))







No comments

hill