பாராளுமன்ற தேர்தலுக்கான பரப்புரைகள் அமைதியான முறையில் இடம் பெற்று வருகின்ற நிலையில் வன்னி மாவட்டத்தில் உள்ள அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்ச...
பாராளுமன்ற தேர்தலுக்கான பரப்புரைகள் அமைதியான முறையில் இடம் பெற்று வருகின்ற நிலையில் வன்னி மாவட்டத்தில் உள்ள அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக்குழுக்களும் தமது தேர்தல் பரப்புரைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் வன்னி மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மன்னார் மாவட்ட வேட்பாளர் சோமநாதன் பிரசாத் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (18) தனது குழுவினருடன் மன்னார் ஆயர் இல்லத்திற்குச் சென்று மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை யை சந்தித்து ஆசி பெற்றார்.
இதன் போது அருட்தந்தை விக்டர் சோசை அடிகளாரையும் ஆயர் இல்லத்தில் சந்தித்து ஆசி பெற்ற வேட்பாளர் சோமநாதன் பிரசாத் தனது தேர்தல் பரப்புரைகளை கிராமங்கள் நோக்கி ஆரம்பித்தார்.
No comments