ஒரு முறை பாராளுமன்ற உறுப்பினராக தேர் ந்தெடுக்கப் பட்டால் அவர் சாகும் வரை பாராளுமன்ற உறுப்பினராக இருக்க வேண்டும் என்னும் தமிழர்களின் சாபக் கே...
ஒரு முறை பாராளுமன்ற உறுப்பினராக தேர் ந்தெடுக்கப் பட்டால் அவர் சாகும் வரை பாராளுமன்ற உறுப்பினராக இருக்க வேண்டும் என்னும் தமிழர்களின் சாபக் கேடான அரசியல் கலாச்சாரத்தினை மாற்றி தகைமையும் திறமையும் உள்ள புதியவர்களை பாரளுமன்றத்திற்கு அனுப்ப வேண்டும் என பாராளுமன்ற பொதுத் தேர்தலில் வன்னி மாவட்டத்தில் சுயேற்சைக் குழு கோடாரி சின்னத்தில் இலக்கம் 9 இல் போட்டியிடும் மன்னார் மாவட்டத்தை சேர்ந்த வேட்பாளர் சம்சோன் ஜெரோம் தெரிவித்தார்
ஜெரோம் தன்னைப் பற்றிய அறிமுக நேர்காணலில் இன்றைய தினம் (24) இதனை தெரிவித்தார்
இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,,,,
நான் சாம்சன் ஜெரோம் மன்னார் மாவட்டம் அடம்பன் நெடுங் கண்டல் பிரதேசத்தைச் சேர்ந்தவன். ஒரு சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவன். நான் திருமணம் முடித்திருப்பது பனங்கட்டி கொட்டு எனும் கிராமத்தில். இலங்கையில் எனது முதலாவது பட்டப்படிப்பை முடித்து இங்கிலாந்தில் எனது முதுமாணி பட்டத்தை நிறைவு செய்து இருக்கிறேன்.
நான் இலங்கையில் கடந்த 17 வருடங்களாக பல அரச சார்பற்ற நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றியதோடு கடந்த பத்து வருடங்களாக அதே பணியை வெளிநாடுகளில் தொடர்ந்து கொண்டு தற்போது அரசியலில் பிரவேசித்திருக்கின்றேன்.

மக்கள் தான் கேட்டார்கள் நேர்மையானவர்கள், ஊழலற்றவர்கள் ,பேச்சுத் திறன் உள்ளவர்கள் ,ஆளுமை உள்ளவர்கள் துறை சார்ந்த அறிவு உள்ளவர்கள் ,கல்வி அறிவுள்ளவர்கள் ,மக்கள் பணியாற்றுவதில் அனுபவம் உள்ளவர்கள் மும்மொழி திறமை கொண்டவர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்று விரும்பி கேட்டுக் கொண்டார்கள்.
இவை அனைத்தையும் கொண்டவனாக தான் நான் இருக்கிறேன். அந்த காரணத்திற்காக தான் என்னுடைய தொழிலை விட்டு நான் அரசியலுக்கு வந்திருக்கிறேன். அதே நேரம் மக்கள் என்னை வெற்றிபெறச் செய்வார்கள் என்னும் நம்பிக்கையும் என்னிடம் உள்ளது.
அதை விட இப்பொழுது தமிழ் மக்களின் அரசியலில் எவ்வாறான மாற்றம் வர வேண்டுமென்றால் அடிப்படை அரசியல் கலாச்சார மாற்றம் மாற்றத்திற்கான காலம் அதற்குரிய அத்திவாரங்களை போடவேண்டிய தேர்தலாக தான் நான் இந்த தேர்தலை பார்க்கிறேன்.
ஏன் என்று சொன்னால் இவ்வளவு காலமும் ஒருவர் பாராளுமன்றத்துக்கு சென்று விட்டால் அவர் சாகும்வரை பாராளுமன்ற உறுப்பினராக தான் இருக்க வேண்டும் என்ற இந்த கலாச்சாரம் மாற வேண்டும் .
இந்த சிந்தனை மாற வேண்டும் அடுத்த தலைமுறையினருக்கு தேவையானவர்களை அடையாளம் கண்டு நேர்மையுடன் செயல்படுபவர்களை பாராளுமன்றத்திற்கு அனுப்ப வேண்டும் இது பிரதானமானது .
எனவே எனக்கென்று நல்ல தொழில் உள்ளது. தொழிலை வைத்து என் வாழ்வை அபிவிருத்தி செய்து கொள்ளக் கூடிய நிலைமையும் இருந்தது.அவை எல்லாவற்றையும் தூக்கி போட்டு விட்டு மக்களுக்குரிய என்னுடைய சேவையை அர்ப்பணிப்புடன் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் அரசியல் பயணத்தில் நான் காலடி எடுத்து வைத்திருக்கிறேன்.

மக்களே உங்களுடைய ஆதரவுகளை என்னை போன்றவர்களுக்கு அளியுங்கள். எங்களின் வெற்றி உங்கள் வெற்றியாக அமையும் என்று வன்னி மாவட்டத்தின் சுயேற்சைக் குழு கோடாரி சின்னத்தில் இலக்கம் 9 இல் போட்டியிடும் வேட்பாளர் சம்சோன் ஜெரோம் தெரிவித்தார் .
No comments