Page Nav

HIDE

Breaking News:

latest

மன்னார் மடு பிரமனாலங்குளம் பகுதியில் விபத்து-ஒருவர் காயம்.

 மடு பிரமனாலங்குளம் பகுதியில் இன்று வியாழக்கிழமை (24) மாலை வவுனியா செட்டிகுளம் மெனிக்பாம் பகுதியை சேர்ந்த பான் வியாபாரத்தில் ஈடுபடும்  முச்ச...

 மடு பிரமனாலங்குளம் பகுதியில் இன்று வியாழக்கிழமை (24) மாலை வவுனியா செட்டிகுளம் மெனிக்பாம் பகுதியை சேர்ந்த பான் வியாபாரத்தில் ஈடுபடும்  முச்சக்கர வண்டி  விபத்துக் குள்ளாகியுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த முச்சக்கர வண்டியின்  சாரதி பொதுமக்கள் உதவியுடன் மீட்கப்பட்டு பிரமனாலங்குளம்  பூவரசங்குளம் வைத்தியசாலைக்கு   கொண்டு செல்லப்பட்டார்.

செட்டிகுளம் மெனிக்பாம் பகுதியை சேர்ந்த பான் விற்பனை செய்யும் முச்சக்கர வண்டி  பிரமனாலங்குளம் வழியாக மடு சென்ற போது சந்தியிலிருந்து 500 மீற்றர் தூரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை அப்பகுதி பொலிசார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது..

        ((கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்)))






No comments

hill