Page Nav

HIDE

Breaking News:

latest

மன்னாரில் சட்ட விரோதமான முறையில் இரவு நேரத்தில் கடல் அட்டை பிடித்த 06 பேர் கடற்படையினரால் கைது

மன்னார் கிழக்கு கடற்கரைப் பகுதியான அரிப்பு  பண்டாரவெளி கடற்பரப்பில் கடற்படையால் முன்னெடுக்கப்பட்ட   விசேட தேடுதல் நடவடிக்கையின் போது சட்ட வி...

மன்னார் கிழக்கு கடற்கரைப் பகுதியான அரிப்பு  பண்டாரவெளி கடற்பரப்பில் கடற்படையால் முன்னெடுக்கப்பட்ட   விசேட தேடுதல் நடவடிக்கையின் போது சட்ட விரோதமான முறையில் இரவு வேளையில் கடல் அட்டை பிடித்த  06 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நடவடிக்கையின் விளைவாக 01 டிங்கி படகு மற்றும் 227 சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட கடல் அட்டைகள் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

சட்டவிரோத மீன்பிடி நடைமுறைகளைத் தடுக்கும் நோக்கில், இலங்கை கடற்படை  தீவைச் சுற்றியுள்ள கரையோர மற்றும் கடற்பரப்புகளில் வழக்கமான தேடுதல் நடவடிக்கைகளையும் ரோந்து பணிகளையும் மேற்கொண்டு வருகிறது.



இந்த சம்பவமானது நேற்று முன்தினம் (1) நடைபெற்றது .

இந்த நடவடிக்கையில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் சிலாவத்துறை அரிப்பு மற்றும் நானாட்டான் பிரதேசங்களைச் சேர்ந்த 22 வயதுக்கும் 50 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என அடையாளம் காணப் பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் கடல் அட்டை  மற்றும் இழுவை படகுகளுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் கடற்றொழில் உதவி பணிப்பாளர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்.

விளம்பர தொடர்புகளுக்கு:-
கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்.
கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்.
கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்.
கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்.
கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்.
கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்.
கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்.

No comments

hill