Page Nav

HIDE

Breaking News:

latest

மன்னார் மாவட்டத்தில் 25 க்கும் மேற்பட்ட நலன்புரி நிலையங்களில் பாதிக்கப்பட்ட மக்கள்-நேரடியாக சென்று அவசர உதவிகளை முன்னெடுத்து வரும் செல்வம் எம்.பி.

மன்னார் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கடும் மழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக இதுவரை 14 ஆயிரத்து 237 குடும்பங்...

மன்னார் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கடும் மழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக இதுவரை 14 ஆயிரத்து 237 குடும்பங்களைச் சேர்ந்த  49 ஆயிரத்து 560 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

இவர்களில் 2100 நபர்கள் வரை மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 25 நலன்புரி நிலையங்களில்  தங்க வைக்கப்பட்டுள்ளனர்.பாதிக்கப்பட்ட மக்களையும் நலன்புரி நிலையங்களில் உள்ள மக்களையும் அதிகாரிகள் பார்வையிட்டு உதவிகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ கட்சியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு அத்தியாவசிய உதவிகளை முன்னெடுத்து வருகின்றார்.அவருடன் ரெலோ கட்சியின் மாவட்ட அமைப்பாளர் டானியல் வசந்தனும் சென்று  அவசர உதவிகளை முன்னெடுத்து வருகின்றார்.

-சமைத்த உணவு ,உலர் உணவு பொருட்கள்,குழந்தைகளுக்கான பால் மா மற்றும் தேவை அறிந்து நுளம்பு வலைகளையும் வழங்கி வருகிறார்.

பாதிப்புக்கள் தொடர்ந்தும் அதிகரித்து வருகின்ற மையினால் அரசாங்கத்தின் உதவிகள் உரிய முறையில் பாதிக்கப்பட்ட மக்களை சென்றடையாத நிலை காணப்பட்டதாகவும் ,தொடர்ச்சியாக மன்னார் மாவட்டத்தில் பாதிப்புகள் மற்றும் மக்களின் இடப்பெயர்வுகள் அதிகரித்து காணப்படுகிறமையினால் மன்னார் மாவட்ட மக்களின் நலனை கருத்தில் கொண்டு இடர் கால நிலையை கருத்தில் கொண்டு  ஜனாதிபதி துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும்,அரசாங்கம் குறித்த விடையத்தில் அசமந்த போக்குடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.மன்னாரை போன்று வவுனியா மற்றும் முல்லைத்தீவிலும் பாதிப்புகள் அதிகரிக்கின்றது.

எனவே வன்னி மாவட்டத்தில் மக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்ட மையினால் ஜனாதிபதி துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு துரித கதியில் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.என அவர் மேலும் தெரிவித்தார்.




No comments

hill