Page Nav

HIDE

Breaking News:

latest

மன்னார்-யாழ் பிரதான வீதி பெரியமடு கொமான்டோ ராணுவ பயிற்சி முகாமில் 500 இற்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் தனிமைப்படுத்தல்.

மன்னார்-யாழ் பிரதான வீதி பெரியமடு கொமான்டோ ராணுவ பயிற்சி முகாமில்   500 இற்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் தனிமைப்படுத்தி உள்ளதாக தெரிய வருகிறத...

மன்னார்-யாழ் பிரதான வீதி பெரியமடு கொமான்டோ ராணுவ பயிற்சி முகாமில்   500 இற்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் தனிமைப்படுத்தி உள்ளதாக தெரிய வருகிறது.

குறித்த பயிற்சி முகாமில் பயிற்சி நடவடிக்கையில் ஈடுபட்ட ராணுவ வீரர்கள் சிலருக்கு சுகயீனம் ஏற்பட்ட நிலையில் அவர்கள் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டனர்.

இதன் போது இவர்களுக்கு முன்னெடுக்கப்பட்ட மருத்துவ பரிசோதனையின் போது அவர்கள் மூளைக் காய்ச்சல் ஏற்பட்டமை கண்டறியப்பட்டது.

இதை மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர்  அஸாத் எம் ஹனீபா உறுதி படுத்தினார்.

இந்த நிலையில் குறித்த பயிற்சி முகாமில் பயிற்சி நடவடிக்கைகளை நிறுத்த வைத்திய தரப்பினால் கோரிக்கை முன் வைக்கப்பட்ட நிலையில்,அங்கு பயிற்சி நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டு அங்கிருந்த 500 இற்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் தனிமைப் படுத்தப் பட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது.


No comments

hill