மன்னார் மாவட்டத்தில் உள்ள இளைஞர்,யுவதிகளின் விளையாட்டுத் துறையை ஊக்குவிக்க எதிர்காலத்தில் துரித நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என தமிழ் தேச...
மன்னார் மாவட்டத்தில் உள்ள இளைஞர்,யுவதிகளின் விளையாட்டுத் துறையை ஊக்குவிக்க எதிர்காலத்தில் துரித நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என தமிழ் தேசியக் கூட்டணியின் மன்னார் மாவட்ட வேட்பாளர் அ. றொஜன் தெரிவித்தார்.
தீபாவளி பண்டிகையையொட்டி நேற்றைய தினம் (31) பெரிய பண்டிவிரிச்சான் வள்ளுவர் விளையாட்டு கழகம் ஏற்பாடு செய்த தீபாவளி சிறப்பு நிகழ்வில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் மன்னார் மாவட்ட வேட்பாளர் அ. றொஜன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டிருந்தார் ..
இதன் போது குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் உரையாற்றுகையில்,,,
தற்போது இளைஞர்கள் மத்தியில் அதிகளவாக பாவனையில் போதைப்பொருட்கள் காணப்படுவதோடு,அவர்கள் வழி தவறிப் போகும்
ஏனைய பிற நடவடிக்கைகளில் இருந்து அவர்களை பாதுகாக்க விளையாட்டு நிகழ்வுகள் மிக உறுதுணையாக அமைகின்றன.
எனவே எதிர்வரும் காலங்களிலும் இளைஞர்களுக்கான விளையாட்டு நிகழ்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஒவ்வொரு கழகங்களுக்கும் விளையாட்டு உபகரணங்கள் மற்றும் அவர்கள் தங்கள் கிராமங்களில் விளையாடுவதற்கு உரிய விளையாட்டு மைதானங்களை புனரமைத்தல் போன்ற பணிகள் முன்னெடுக்கப்படும்.
எனவே இளைஞர்கள் நாளைய தலைவர்கள் என்பதை கருத்தில் கொண்டு போதை பாவனையை கட்டுப்படுத்த உங்களால் ஆன நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என தெரிவித்தார்.
கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்.
விளம்பர தொடர்புகளுக்கு:-
கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்.
கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்.
கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்.
கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்.
கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்.
கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்.
கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்.
No comments