தமிழரசுக்கட்சியில் வன்னி மாவட்டத்தில் படுதோல்வி அடைந்த சத்தியலிங்கம் தேசிய பட்டியலுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார். கட்சியின் பதில் பொது செய...
தமிழரசுக்கட்சியில் வன்னி மாவட்டத்தில் படுதோல்வி அடைந்த சத்தியலிங்கம் தேசிய பட்டியலுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
கட்சியின் பதில் பொது செயலாளராக இருந்து வன்னி மாவட்டம் குறிப்பாக வவுனியாவில் தன்னை பிரதிநிதித்துவப்படுத்த கூடிய மாவட்டத்தில் கூட, 6ஆவது இடத்தில் தான் கட்சி வென்றிருக்கிறது.
அதுமட்டுமல்ல இரண்டாம் நிலையில் கூட ப.சத்தியலிங்கம் (5,575 வாக்குகள் - 7.29 வீதம்) வெல்லாத நிலையில் மாற்றத்தை நோக்கி தென்னிலங்கையில் மட்டுல்ல வடக்கு கிழக்கிலும் கூட தமிழரசுக் கட்சிக்கு பெருவாரியான வாக்குகள் அளிக்கப்பட்ட நிலையில், தோல்வியடைந்த சத்திய லிங்கத்திற்கு தேசியப்பட்டியல் ஆசனம் வழங்கப்பட்டுள்ள மையானது தமிழரசுக் கட்சியின் மத்திய குழு, பொதுக்குழு மற்றும் அடிமட்ட தொண்டர்கள், பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக இலங்கை தமிழரசுக் கட்சியின் சார்பில் வடக்கு - கிழக்கில் அதிகளவாக இருக்கக்கூடிய பெண்களை பிரதி நிதி த்துவப்படுத்தாத, யாரும் செல்லாத ஒரு விமர்சனமும் முன்வைக்கப்படுகின்றது.
ஒட்டுமொத்தத்தில் இலங்கை தமிழரசு கட்சி தேர்தலில் தோல்வி அடைந்த ஒருவருக்கு தேசியப் பட்டியல் வழங்குவதில்லை என சுமந்திரன் கூறிய வாக்குறுதி இங்கு மீறப்பட்டதாக அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் தேசியப்பட்டியல் ஆசனத்தை சத்திய லிங்கத்திற்கு வழங்க கட்சியின் அரசியல் குழு தீர்மானித்துள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழரசுக்கட்சியின் அரசியல் குழுக்கூட்டம் வவுனியா ஈரப்பெரியகுளத்தில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இன்று (17) காலை இடம்பெற்றது.
இதன்போது கடந்த தேர்தலில் தமிழரசுக் கட்சிக்கு கிடைத்த ஒரு தேசிய பட்டியல் ஆசனத்தை வழங்கும் விடயம் தொடர்பாக நீண்ட விவாதங்கள் இடம்பெற்றது.
விவாதங்களின் பின்னர் குறித்த தேசிய பட்டியல் ஆசனத்தை ஏற்கனவே வன்னி தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட்டு தோல்வி அடைந்த ப.சத்தியலிங்க த்திற்கு வழங்குவதற்கு அரசியல் குழுவால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேற்குறித்த தீர்மானம் இவ்வாறு எடுக்கப்பட்டதாக யாழ். மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.

எனினும் குறித்த ஆசனம் வழங்கப்பட்டமை குறித்து மன்னார் மாவட்டத்தில் பல்வேறு கோணங்களில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
No comments