வவுனியாவில் தமிழரசுக் கட்சியின் செயலாளர் ப.சத்தியலிங்கம் அவர்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றப் பத்திரிக்கையின் பிரதியை முன்னாள் பாராளும...
வவுனியாவில் தமிழரசுக் கட்சியின் செயலாளர் ப.சத்தியலிங்கம் அவர்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றப் பத்திரிக்கையின் பிரதியை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகன் வழங்க முற்பட்ட போது அதை முன்னாள் எம்.பி சுமந்திரன் வாங்க மறுத்த சம்பவம் வவுனியாவில் இடம் பெற்றது.
தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுக்கூட்டம் வவுனியா ஈரப்பெரியகுளத்தில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இன்று இடம்பெற்றது.
இதன்போது, கட்சியின் செயலாளரின் பொறுப்பற்ற தான்தோன்றித்தனமான செயற்பாடுகளால் கட்சியின் கூட்டுப் பொறுப்பு உருக்குலைக்க பட்டதாகவும், அதை விசாரணை செய்யுமாறு கோரி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகனால் கட்சியின் பதில் செயலாளருக்கு எதிராக குற்றப்பத்திரிகை ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
குற்றப் பத்திரிக்கையின் பிரதியை கூட்டத்திற்கு வருகை தந்த அனைவருக்கும் சிவமோகன் வழங்கியிருந்தார்.
இந்நிலையில் சுமந்திரனுக்கும் அதை வழங்க முற்பட்ட போது அவர் அதனை பெற்றுக் கொள்ள மறுத்து விட்டுச் சென்றார்.
குறித்த குற்றப்பத்திரிகையில், கட்சி மாநாட்டிற்கு முன்னர் ஆலோசனை கூட்டம் நடாத்தாமை, சுகயீனம் எனக்கூறி பொதுக்குழு கூட்டத்திற்கு வராமை, யாப்பிற்கு முரணாக தேர்தல் நியமனக்குழு நியமித்தமை, கட்சி உருக்குலைய காரணமாக இருந்தமை, முல்லைத்தீவு மாவட்ட குழுவின் ஆலோசனை இன்றி தேர்தல் நியமனங்களை வழங்கியமை போன்ற குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இது தொடர்பாக கருத்து தெரிவித்த சிவமோகன்,
தோற்றவர்கள் பாராளுமன்ற தேர்தல் கேட்ககூடாது என்று சொன்னவர் யார். இப்படி ஒரு முடிவு கட்சி எடுக்கவில்லை. கட்சி எடுக்காத முடிவை கட்சியின் பேச்சாளர் என்ற போர்வையில் உட்புகுத்த கூடாது.
முஸ்லிம்களை புலிகள் இனச்சுத்திகரிப்பு செய்தார் கள் என்ற அவரது கருத்து தமிழரசுக் கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. அது கட்சி எடுத்த முடிவா இல்லையே.
போரை நீங்கள் ஏற்கவில்லை. நீங்கள் கொழும்பில் இருந்தீர்கள். நாங்கள் இந்த மண்ணில் இருந்தோம். அதை ஏற்பதா இல்லையா என்று நாங்களே தீர்மானிக்க வேண்டும். அதை நீங்கள் சொல்லத் தேவையில்லை.
தோற்றவர்கள் கேட்க கூடாது என்று கூறிவிட்டு தேசிய பட்டியல் குடுப்பதற்கு இனி இங்கு போராட்டம் நடக்கும். நான் எடுக்க மாட்டேன் என்று சொல்லி அவரும். நீங்கள் எடுங்கள் என்று எங்கட ஆக்கள் சொல்லி சில நேரம் குடுக்கப் படலாம்.
அது பிழை. படுதோல்வியடைந்த சுமந்திரன் மற்றும் தமிழரசுக் கட்சியை உருக்குலைத்த சத்தியலிங்கம் ஆகியோர் தாங்களாகவே பதவிகளில் இருந்து விலகிக்கொள்ள வேண்டும்.
தேசிய பட்டியல் ஆசனத்தை வன்னிக்கு கொடுக்க வேண்டும் என்றால் அது இரண்டாவது விருப்பு வாக்கை எடுத்தவருகே கொடுக்க வேண்டும் என்றார்.
No comments