Page Nav

HIDE

Breaking News:

latest

தமிழ் தேசிய கட்சிகள் பிரிந்து காணப்படுகின்ற மையினால் பாராளுமன்ற தேர்தலில் ஈரோஸ் ஜனநாயக முன்னணி நேரடியாக போட்டியிடுகின்றது- வேட்பாளர் முனியசாமி நாகரூபன்.

 ஈரோஸ் ஜனநாயக முன்னணி கடந்த காலங்களின் தமிழ் தேசிய கட்சிகளுக்கு தமது ஆதரவை வழங்கி வந்த நிலையில்,தற்போது தமிழ் தேசிய கட்சிகள் பிரிந்து காணப்ப...

 ஈரோஸ் ஜனநாயக முன்னணி கடந்த காலங்களின் தமிழ் தேசிய கட்சிகளுக்கு தமது ஆதரவை வழங்கி வந்த நிலையில்,தற்போது தமிழ் தேசிய கட்சிகள் பிரிந்து காணப்படுகின்ற நிலையில்  மக்களின் ஆதரவை இழந்து வருகிறது.இந்த நிலையில் இம்முறை பாராளுமன்ற தேர்தலில் ஈரோஸ் ஜனநாயக முன்னணி நேரடியாக போட்டியிடுவதாக மன்னார் மாவட்ட தனியார் போக்குவரத்துச் சங்க தலைவரும்,ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் வன்னி மாவட்ட வேட்பாளருமான முனியசாமி நாகரூபன் தெரிவித்தார்.


மன்னாரில் இன்று செவ்வாய்க்கிழமை (5) மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,,,


தமிழ் தேசிய கட்சிகள் பிரிந்து காணப்படுகின்ற நிலையில்  மக்களின் ஆதரவை இழந்து வருகிறது.இதனால் வாக்குகள் பிரிந்து வேறு கட்சிகளுக்கு செல்லும் நிலை காணப்படுகின்றது.

இந்த நிலையில் குறித்த வாக்குகள் வேறு கட்சிகளுக்கு பிரிந்து செல்லாமல் இருக்க குறித்த வாக்குகளை நாங்கள் பெற்றுக் கொள்ளும் முகமாக  ஈரோஸ் ஜனநாயக முன்னணி வன்னியில் போட்டியிடுகின்றது.


தமிழ் தேசிய கட்சிகள் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக எதிர் கட்சி அரசியலை மேற்கொண்டு வந்தமையினால் தமிழ் மக்கள் பொருளாதார ரீதியில் பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்தனர்.எமது கட்சி பாராளுமன்ற தேர்தலில் ஆசனங்களை பெற்றுக் கொள்வதன் மூலம் ஆழ்கின்ற கட்சியுடன் இணைந்து மக்களுக்கு பொருளாதார ரீதியாக வளர்ச்சியை ஏற்படுத்துவதற்கு தீர்மானித்துள்ளோம்.

ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் மாவீரர் எனது தந்தை.அவர் போராட்டம் மூலமாக செய்ய முடியாத சில காரியங்களை நான் அரசியல் ரீதியாக முன் னெடுக்கவுள்ளேன்.அதற்காகவே நான் இத்தேர்தலில் போட்டியிடுகின்றேன்.

தமிழ் தேசிய கட்சிகளுக்குள் காணப்படும் உள் பூசல்கள் ,கட்சிகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள பிரிவு மற்றும் வேட்பாளர்களுக்கு இடையிலான பிரச்சினைகள்  வடக்கு கிழக்கில் காணப்படுகின்றது.வன்னி மாவட்ட மக்கள் தற்போது பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

மன்னார் மாவட்டத்தில் தற்போது காற்றாலை மின் உற்பத்தி,கனிய மணல் அகழ்வு,மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினை,விவசாயிகள் பிரச்சினை  உட்பட மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சனைகளுக்கு எமது கட்சி முழுமையாக செயல்பட்டு தீர்வை பெற்றுக் கொடுக்கும்.

ஈரோஸ் ஜனநாயக முன்னணி  ஒரு தமிழ் தேசிய கட்சி என்பதை மக்களுக்கு தெரியப்படுத்துகின்றேன்.எனவே ஈரோஸ் ஜனநாயக முன்னணிக்கு வாக்களித்து எங்களை பாராளுமன்றம் அனுப்புவதன் ஊடாக மக்களுக்கு எதிர்கொள்ளும் அனைத்து பிரச்சினைகளுக்கும் ஒரு தீர்வை பெற்றுத் தர முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்.
விளம்பர தொடர்புகளுக்கு:-

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்.
 

No comments

hill