மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வந்த கடும் மழை காரணமாக பாதிக்கப்பட்டு,தற்காலிக நலன்புரி நிலையங்களில் வசித்து வந்த நிலையில் மீண்டும்...
மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வந்த கடும் மழை காரணமாக பாதிக்கப்பட்டு,தற்காலிக நலன்புரி நிலையங்களில் வசித்து வந்த நிலையில் மீண்டும் தமது வீடுகளுக்குச் சென்ற நிலையில் மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஜிம் ரோன் நகர் கிராமத்தில் தெரிவு செய்யப்பட்ட 200 குடும்பங்களுக்கு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை(3) காலை உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
மன்னார் நலன்புரிச்சங்கம் ஐக்கிய இராட்சியத்தின் (UK) தலைவர் ஜேம்ஸ் பத்திநாதனின் ஏற்பாட்டில் மன்னார் பிரதேசச் செயலகத்தின் ஒருங்கிணைப்பில் குறித்த உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.
-குறித்த நிகழ்வு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (3) காலை ஜிம் ரோன் நகர் ஆலயத்தில் இடம் பெற்றது.
-குறித்த நிகழ்வு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (3) காலை ஜிம் ரோன் நகர் ஆலயத்தில் இடம் பெற்றது.
மன்னார் பிரதேசச் செயலாளர் எம்.பிரதீப் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன், மன்னார் நலன்புரிச்சங்கம் ஐக்கிய இராச்சியத்தின் மன்னார் மாவட்ட பிரதி நிதியும் வடமாகாண முன்னாள் பிரதம செயலாளருமான பத்திநாதன்,மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் கே.திலீபன்,உதவி திட்டமிடல் பணிப்பாளர் திருமதி எஸ். திவாகரி ஆகியோர் கலந்து கொண்டு தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு 5 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உலர் உணவு பொதிகளை வழங்கி வைத்தனர்.
இதன் போது கருத்து தெரிவித்த பிரதேசச் செயலாளர் எம்.பிரதீப்,,
நாட்டில் ஏற்பட்ட கடும் மழை காரணமாக வடமாகணத்தில் மன்னார் மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டது.பாதிக்கப்பட்ட அதிகளவான மக்கள் இடம் பெயர்ந்து தற்காலிக முகாம்களில் வசித்து வந்தனர்.
தற்போது படிப்படியாக வெள்ள நீர் குறைவடைய மக்கள் நலன்புரி நிலையங்களில் இருந்து வீடுகளுக்குச் செல்லுகின்றனர்.எனினும் பல இடைத்தங்கல் முகாம்கள் உள்ளது.எனினும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தற்போது தனவந்தர்கள்,தனியார் நிறுவனங்கள் மனிதாபிமான உதவிகளை முன்னெடுத்து வருகின்றனர்.அவர்களுக்கு எமது நன்றிகள்.
எனினும் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உதவிகள் சென்றடைய வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு.எனவே பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை முன்னெடுக்கும் தனவந்தர்கள்,தனியார் நிறுவன பிரதிநிதிகள் உதவிகளை முன்னெடுக்கும் போது பிரதேச செயலகம் மற்றும் மாவட்ட செயலகத்தின் ஆலோசனைகளுக்கு அமைவாக மக்களுக்கு உதவிகளை வழங்குவது சாலச் சிறந்தது.
எமது ஆலோசனைகளுக்கு அமைவாகவே மன்னார் நலன்புரிச்சங்கம் ஐக்கிய இராச்சியத்தின்(UK) உலர் உணவு உதவிகள் இக்கிராம மக்களுக்கு வழங்கப்படுகிறது.எனவே பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உதவிகள் கிடைக்க வேண்டும்.என அவர் மேலும் தெரிவித்தார்.
No comments