தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் மன்னார் கீரி கடற்கரையில் பிளாஸ்டிக் பாவனை குறைப்பு தொடர்பான விழிப்புணர்வு சிரமதானம் இன்று ...
தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் மன்னார் கீரி கடற்கரையில் பிளாஸ்டிக் பாவனை குறைப்பு தொடர்பான விழிப்புணர்வு சிரமதானம் இன்று ஞாயிற்றுக்கிழமை (15) காலை இடம்பெற்றது .
தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் இளைஞர் குழுவினர் குறித்த சிரமதான பணியில் ஈடுபட்டனர்.
அத்தோடு மாவட்ட மட்ட கலந்துரையாடலும் இடம்பெற்றது.
இதில் 15 இளைஞர்கள் பங்குபற்றினர். இந்நிகழ்வு தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் மாவட்ட இணைப்பாளர் பெனடிக் குரூஸ் அவர்களின் ஏற்பாட்டில், திட்ட செயற்பாட்டாளர் பிரியந்தா அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
No comments