Page Nav

HIDE

Breaking News:

latest

மன்னார் முருங்கன் பஜார் பகுதியில் வைத்து 200 போதை மாத்திரைகளுடன் சிலாபத்துறை பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கைது.

இராணுவ புலனாய்வு பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில்,முருங்கன் பொலிஸாரினால் ஒரு தொகுதி போதை மாத்திரைகளுடன் சிலாபத்துறை பகு...

இராணுவ புலனாய்வு பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில்,முருங்கன் பொலிஸாரினால் ஒரு தொகுதி போதை மாத்திரைகளுடன் சிலாபத்துறை பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞர் ஒருவர் நேற்றைய தினம் சனிக்கிழமை(4) முருங்கன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.

அவரிடம் இருந்து 200 போதை  வில்லைகள்  அடங்கிய பொதி மீட்கப்பட்டுள்ளது.குறித்த நபர் போதை மாத்திரைகளுடன் முருங்கன் பஜார் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டார்.

-கைது செய்யப்பட்ட நபர் முருங்கன் பொலிஸ் நிலையத்தில் வைத்து விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார்.

விசாரணைகளின் பின்னர் சந்தேக நபரும்,போதை மத்திரைகளும் மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த முருங்கன் பொலிஸார் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

No comments

hill