மன்னார் - வங்காலையில் படுகொலை செய்யப்பட்ட அருட்பணி மேரி பஸ்ரியன் அடிகளாரின் 40 ஆம் ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிக்கப் பட்டுள்ளது. குறித்த நிகழ்...
மன்னார் - வங்காலையில் படுகொலை செய்யப்பட்ட அருட்பணி மேரி பஸ்ரியன் அடிகளாரின் 40 ஆம் ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிக்கப் பட்டுள்ளது.
குறித்த நிகழ்வு இன்று (6.) திங்கட்கிழமை காலை வங்காலை புனித ஆனாள் ஆலயத்தில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தலைமையில் குருக்கள் இணைந்து இரங்கல் திருப்பலி ஒப்புக் கொடுத்தனர்.
இதன்போது மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தலைமையில் குருக்கள் இணைந்து இரங்கல் திருப்பலி ஒப்புக் கொடுத்தனர்.
ஆலய வளாகத்தில் அமைந்துள்ள அன்னாரது சிலைக்கு மாலை அனுவிக்க பட்டு சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்த ப்பட்டது.
அதனைத்தொடர்ந்து குருக்கள் மற்றும் கிராம மக்கள் சுடர் ஏற்றி மலர் துர்வி படு கொலை செய்யப்பட்ட அருட்தந்தை மற்றும் மக்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
நாட்டில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுத்தும்,உயிரிழந்த மக்களின் உடல்களை மீட்டு அடக்கம் செய்யவும், பல்வேறு மனிதாபிமான பணிகளில் ஈடுபட்டு வந்த மன்னார் வங்காலை புனித ஆனாள் ஆலய பங்குத்தந்தை அருட்பணி மேரி பஸ்ரியன் அடிகளார் 1985 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 6 ஆம் திகதி அரச படைகளால் படுகொலை செய்யப்பட்டார்.
மேலும் அவருடன் பொது மக்களும் படுகொலை செய்யப்பட்டனர். திருப்பலியின் போது அருட்தந்தையுடன் சேர்ந்து இன்னுயிர் நீத்த உறவுகளுக்கு தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தப் பட்டுள்ளது.
அதனைத்தொடர்ந்து அருட்பணி மேரி பஸ்ரியன் அடிகளார் மற்றும் அவருடன் சேர்ந்து உயிர் நீத்தவர்களின் 40 வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி இரத்ததான நிகழ்வு இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.PIXED BY:-Gva Jeevan Geevan
No comments