ரோகிங்யா அகதிகளை நாடுகடத்த வேண்டாம் என இலங்கை அரசுக்கு பகிரங்க வேண்டு கோளை வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு விடுத்துள்ளது. நேற்றைய தினம்...
ரோகிங்யா அகதிகளை நாடுகடத்த வேண்டாம் என இலங்கை அரசுக்கு பகிரங்க வேண்டு கோளை வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு விடுத்துள்ளது.
நேற்றைய தினம் வியாழக்கிழமை முல்லைத்தீவில் இடம்பெற்ற போராட்டத்தை தொடர்ந்து அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,,,
குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,,,
வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவினரான நாம், 09ம் திகதி ஜனவரி மாதம் 2025 ஆகிய இன்றைய தினம், பெண்கள் குழுக்களின் பிரதிநிதிகள், மனித உரிமைப் பாதுகாவலர்கள், கடற்றொழிலாளர் சங்க உறுப்பினர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுடன் இணைந்து, ரோகிங்யா அகதிகளை நாடுகடத்த வேண்டாம் என இலங்கை அரசிடம் கோருகிறோம்.
இவ் அ வகதிகள் 2024 டிசம்பர் மாதம் 19ம் திகதி இலங்கை கடற்படையினரால் காப்பாற்றப்பட்டவர்களாகும்.
இவர்களது படகை முதலில் கண்ட முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர்கள் இது தொடர்பாக இலங்கை கடற்படைக்கு அறிவித்ததோடு இம்மக்களுக்கு உடனடி உதவிகளையும் வழங்கியதை நாம் மெச்சுகிறோம். அவ்வாறே, அம்மக்களின் உயிர்களைப் பாதுகாப்பதற்காக இலங்கைக் கடப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகiளை கௌரவிக்கிறோம்.
இலங்கையானது ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு அங்கத்துவ நாடாகும். எனவே, ஐக்கிய நாடுகள் சபையின் கொள்கைகளுக்கு மதிப்பளிக்க நாம் கடமைப்பட்டுள்ளோம். அவ்வாறே, சர்வதேச மனிதாபிமான சட்டங்கள், மனித உரிமைச்சட்டங்கள், சர்வதேச வழக்காற்றுச் சட்டங்கள் ஆகியவற்றுக்கு கட்டுப்பட்டு நடக்கும் கடப்பாட்டையும் கொண்டுள்ளோம்.
நாடு கடத்தப்படாமை என்பது இவ்வணைத்துச் சட்டங்களினதும் மையக் கொள்கையாகும். எனவே, மனிதாபிமான விழுமியங்களை நிலைநிறுத்து மாறும், இந்த அகதிகளின் சொந்த இடத்துக்கு அவர்களைத் திருப்பி அனுப்பாதிருக்குமாறும் நாம் இலங்கை அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறோம்.
மேலும், இந்த அகதிகள் முல்லைத்தீவு மாவட்டத்தில் கேப்பாப்புலவு விமானப்படை தளத்தில் இரண்டு வாரங்களுக்கும் மேலாக அம்மாவட்டத்தின் சிவில் நிர்வாகக் கண்காணிப்பு இன்றி தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இராணுவமயமாக்கல் சூழலுக்குள் அகதிகளை தங்க வைப்பது சர்வதேச மனிதாபிமான நியமங்களுக்கும் அடிப்படை மனிதாபிமான விழுமியங்களுக்கும் மாறானதாகும். எனவே, இவ்வகதிகளை மீரியானவில் உள்ள அகதிகள் மையத்துக்கோ அல்லது வேறொரு பொருத்தமான இடத்துக்கோ மாற்றுவதுடன் அப்பிரதேச சிவில் நிர்வாகத்தின் கண்காணிப்புக்குள் அவர்களைக் கொண்டுவர வேண்டும்.
இலங்கை என்பது ஒரு அபிவிருத்தியடைந்து வரும் நாடு எனும் வகையில் இலங்கை சர்வதேச அகதிகளின் புகலிட மையமாக மாறுவதை நாம் ஊக்குவிக்கவில்லை. தற்போதுள்ள அகதிகளை சர்வதேச அகதிகள் சட்டத்துக்கு அமைய நடத்த வேண்டும் என்பதையே நாம் அடிப்படையில் அரசாங்கத்திடம் கோருகிறோம். மேலும், ஐக்கிய நாடுகள் சபையின் ஒத்துழைப்பைப் பெறுமாறும், இந்த அகதிகளுக்கு அகதி அந்தஸ்து வழங்கும் தகைமையுடைய நாடுகளிடம், அந்நாடுகளில் அகதி அந்தஸ்து வழங்குவது குறித்து கலந்துரையாடல் மேற்கொள்ளுமாறும் கோருகிறோம்

No comments