மன்னார் நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவம் தொடர்பாக நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரதான துப்ப...
மன்னார் நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவம் தொடர்பாக நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிரதான துப்பாக்கிச் சூடு நடத்தியவர், அவரை ஏற்றிச் சென்ற முச்சக்கர வண்டியின் சாரதியும் அவர்களில் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
ஏனைய இரண்டு சந்தேக நபர்களில் அடம்பன் பகுதியில் முன்னர் நடந்த இரட்டைக் கொலையில் தொடர்புடைய முக்கிய சந்தேக நபரும் அடங்குவதாக கூறப்படுகிறது.
கடந்த 16ஆம் திகதி மன்னார் நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் பெண் ஒருவர் உட்பட நான்கு பேர் காயமடைந்ததுடன், அவர்களில் இருவர் மன்னார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தனர்.

மன்னார் உயிலங்குளம் பகுதியில் நடந்த இரண்டு கொலைகள் தொடர்பான வழக்கில் ஆஜராவதற்காக மன்னார் நீதிமன்றத்திற்கு வந்திருந்த ஒரு குழுவினரே துப்பாக்கிச் சூட்டில் பலியானார்கள்.
மோட்டார் சைக்கிளில் பிரதேவசித்த இருவர் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றனர்.
உயிலங்குளம் பகுதியில் இரண்டு குழுக்களுக்கு இடையே நீண்டகாலமாக மோதல் இருந்து வருவதாகவும், 2022 ஆம் ஆண்டில் இரண்டு கொலைகளும் 2023 ஆம் ஆண்டில் இரண்டு கொலைகளும் பதிவாகியுள்ளதாக வும் தெரிவிக்கப்படுகிறது.
10.06.2022 அன்று, உயிலங்குளம் பகுதியில் மாட்டு வண்டி போட்டி ஒன்று இடம்பெற்றுள்ளது டன், அங்கு நடந்த ஒரு சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இரண்டு சகோதரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
அந்த சம்பவம் தொடர்பான விசாரணை மன்னார் நீதிமன்றத்தில் 16ஆம் திகதி நடைபெற இருந்த நிலையிலேயே இந்த இரட்டைக் கொலை நடந்துள்ளது.
No comments