மன்னார்-பள்ளமடு பெரியமடு பிரதான வீதியில் நேற்று சனிக்கிழமை (22) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் மே...
மன்னார்-பள்ளமடு பெரியமடு பிரதான வீதியில் நேற்று சனிக்கிழமை (22) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்த சம்பவம் தொடர்பில் குறித்த டிப்பர் வாகனத்தை செலுத்திச் சென்ற சாரதி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
நேற்று சனிக்கிழமை (22) அதிகாலை பெரிய மடு பிரதான வீதியூடாக பயணித்த டிப்பர் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்திற்கு உள்ளாகிய நிலையில் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இதன் போது பெரியமடு பகுதியைச் சேர்ந்த கே.சத்திய பிரபாகரன் (வயது-31) சம்பவ இடத்திலேயே உயிரிழந் ததோடு,சாரதி உள்ளடங்களாக மூவர் காயமடைந்தனர்.
இந்த நிலையில் குறித்த டிப்பர் வாகனத்தின் சாரதியிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது குறித்த சாரதி மதுபோதையில் வாகனம் செலுத்தியமை தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில் குறித்த வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்ட நிலையில் அவரை எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் உத்தரவிட்டார்.
மேலும் காயமடைந்து மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இரு சகோதரர்களில் ஒருவர் வீடு திரும்பியுள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.மேலதிக விசாரணைகளை அடம்பன் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் பல்வேறு கிராமங்களில் தொடர்ச்சியாக இரவு நேரங்களில் சட்டவிரோத மணல் அகழ்வு இடம் பெற்று வருகின்ற போதும் பொலிஸார் அசமந்த போக்குடன் செயல்படுவதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
No comments